05th July 2023 19:51:21 Hours
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைப்பிரிவின் 143 வது காலாட் பிரிகேடின் முதலாவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி விவசாயம் மற்றும் தலைமைத்துவ மேம்பாடு பற்றிய அறிவை மேம்படுத்துவதற்கான 10 வது 'ஹரித நியமுவோ' திட்டத்தை சனிக்கிழமை (2023 ஜூலை 1) வாரியபொல வயம்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுத்தது.
வெல்லவ மத்திய கல்லூரி மற்றும் கும்புக்கஹமுல்ல ஸ்ரீ போதி மத்திய கல்லூரி ஆகிய இரண்டையும் சேர்ந்த 71 மாணவர்கள் கலந்து கொண்ட இச் செயலமர்வில் முதலாவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் பயிற்சியாளர்கள் மற்றும் தலைமைத்துவ பயிற்றுவிப்பாளர்கள் கோட்பாட்டு மற்றும் நடைமுறை அமர்வுகளை வழங்குவதன் மூலம் திட்டத்திற்கு பங்களித்தனர்.
மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் 143 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 1 முதலாவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் இத் வேலைத்திட்டத்திற்கான இராணுவத்தினரின் பங்களிப்பை உன்னிப்பாகக் கண்காணித்தனர்.