Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th March 2024 10:39:13 Hours

முதலாவது இராணுவ மருத்துவ படையணியில் அனர்த்த முகாமைத்துவம் பற்றிய செயலமர்வு

முதலாவது இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படையினர் இராணுவ வைத்திய சேவை பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ் வேரஹெர முதலாவது இலங்கை இராணுவ மருத்துவப் படையணியில் 2024 பெப்ரவரி 26 முதல் 2024 மார்ச் 01 வரை இலங்கை இராணுவ மருத்துவப் படையணி பணியாளர்களிடையே தயார்நிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் அனர்த்த முகாமைத்துவ செயலமர்வை நடாத்தியது.

இத்திட்டத்தில் கோட்பாட்டு மற்றும் நடைமுறை அம்சங்கள், வாழ்க்கையில் பேரழிவுகளுக்கு முகம் கொடுத்தல் போன்றவற்றைஉள்ளடக்கியிருந்ததுடன், இச்செயலமர்வை அவசர மருத்துவ வைத்திய ஆலோசகர் மேஜர் ஆர்.எம்.டி.ஐ ரத்நாயக்க அவர்கள் மேற்பார்வையிட்டார்.

இராணுவ வைத்திய சேவை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கே.ஜி.கே.எச். விஜேவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.