Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th December 2021 12:00:34 Hours

முதலாம் படை தலைமையகத்தின் முயற்சியில் வாழைப்பாடு மாணவர்களுக்கான புதிய தகவல் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம்

கிளிநொச்சி முதலாம் படை தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய கிளிநொச்சி கொமர்ஷல் வங்கியினால் வழங்கப்பட்ட நிதி உதவியை கொண்டு, கிளிநொச்சி வாழைப்பாடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்ப ஆய்வுக்கூட கட்டிடம் நிறுவப்பட்டது.

இத்திட்டம் ஒரு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு, இந்த ஆய்வுக்கூடத்தை கையளிப்பதற்காக முதலாம் படையின் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட முதலாம் படையணியின் பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் சந்திமால் பீரிஸ் அவர்களினால் திங்கட்கிழமை (20) திறந்து வைக்கப்பட்டது.

66 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் 663 பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிரியஞ்சித் ஹன்னடிகே ஆகியோரின் பங்களிப்புடன் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.

இத்திட்டத்திற்கு 2 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரிகயவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றிருந்ததோடு, திட்டத்தின் ஒருங்கிணைப்பு பணிகள் கிளிநொச்சி முதலாம் படைத் தலைமையகத்தின் உளவியல் நடவடிக்கை மற்றும் போர் தகவல் பயிற்சி பிரிவினரால் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.