Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th May 2024 17:17:27 Hours

முதலாம் படையின் வெசாக் தினகொண்டாட்டம்

2024 மே 23 முதல் 25 வரை இரணைமடு பிரதேசத்தில் முதலாம் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பி அமுனுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முதலாம் படை படையினர் வண்ணமயமான வெசாக் வலயத்தை ஏற்பாடு செய்தனர்.

இவ்விழாவின் ஒரு பகுதியாக, இரணைமடு மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் உள்ள 6000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உணவு பொதிகளை வழங்கி, முதலாம் படை மற்றும் அதன் கீழ் உள்ள கட்டளை அமைப்புக்கள் அன்னதான நிகழ்வினை நடத்தின. நிகழ்ச்சியின் போது, மத வழிபாடுகளுக்கு மத்தியில் வெசாக் கூடுகளை முதலாம் படை தளபதி திறந்து வைத்தார். பின்னர் அனைவரும் ஒரு சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டதுடன் முதலாம் படை தளபதி படையினரின் முயற்சிகளை பாராட்டினார். படையலகுகளின் படையினரின் ஆதரவுடன் முதலாம் படை தலைமையகத்தில் அலங்காரங்கள் செய்யப்பட்டன. மேலும், நிகழ்வின் ஈர்ப்பை அதிகரிக்க இராணுவப் படையினர் பக்தி கீதங்களை பாடினர்.

கிளிநொச்சி பிரதேசத்தில் உள்ள மத தலைவர்கள், அரச அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.