16th April 2025 23:49:43 Hours
முதலாம் படையின் படையினர் 2025 ஏப்ரல் 04 மற்றும் 05 ஆகிய திகதிகளில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை சம்பிரதாய நிகழ்வுகளுடன் கொண்டாடினர். இந்த நிகழ்வில், 53 வது காலாட் படைப்பிரிவு மென்பந்து கிரிக்கெட் போட்டி மற்றும் சம்பிரதாய நிகழ்வுகளுடன் புத்தாண்டு விழாவை கொண்டாடியது. 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎச்எம்எஸ் விக்ரமரத்ன அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும், 58 வது காலாட் படைப்பிரிவு தனது 2025 சூரிய மாங்கல்யவை 2025 ஏப்ரல் 08 ஆம் திகதி புத்தளம் சின்னவில்லுவத்த விளையாட்டு மைதானத்தில் நடாத்தியது. இந்த நிகழ்வில் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்ற பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன. 58 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜேகேஆர் ஜயக்கொடி ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.