Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th September 2023 17:25:03 Hours

முதலாம் படையினரால் படையினருக்கு தைரியத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும் பட்டறை

இராணுவ வீரர்களின் தைரியத்தையும் ஊக்கத்தையும் ஊக்குவிக்கும் நோக்கில், 'உறுதியான மற்றும் துணிச்சலான இராணுவம்' என்ற தலைப்பில் மன உறுதியை மேம்படுத்தும் செயலமர்வு வெள்ளிக்கிழமை (15 செப்டம்பர் 2023) கிளிநொச்சி முதலாம் படைத் தலைமையகத்தில் உள்ள 'நெலும்பியச' பலசெயல்பாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

மேற்குறிப்பிட்ட செயலமர்வானது முதலாம் படையின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் பி அமுனுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, உளவியல் செயற்பாடுகள் பணிப்பகத்தின் பணி நிலை அதிகாரி 2 மேஜர் எச்எம்சீஎம் பண்டார ஆகியோர் இந் நிகழ்வை உன்னிப்பாகக் கண்காணித்தனர்.

இந்நிகழ்வில் 519 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டதுடன், நாடளாவிய ரீதியில் 234 இராணுவ நிறுவனங்களின் இராணுவத்தினர் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இதில் இணைந்தனர். இந்த நிகழ்வை முதலாம் படையின் உளவியல் செயல்பாடுகள் பிரிவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.