24th April 2023 18:25:00 Hours
முதலாம் படையணி தளபதியும் பொதுப்பணிப்பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் எஸ்யுஎம்என் மானகே டப்ளியு டப்ளியுவி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் கிளிநொச்சியில் வசிக்கும் முஸ்லிம்கள் மற்றும் படையினருடன் இணைந்து கிளிநொச்சி ஜும்மா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை (21) மாலை சூரிய அஸ்தமனத்தின் போது நோன்பு துறக்கும் ‘இப்தார்’ நிகழ்வில் கலந்து கொண்டார்.
உலாவிய முஸ்லிம்களால் கடைப் பிடிக்கப்படும் ‘இப்தார்’ நிகழ்வில் ஒருமைப்பாடு மற்றும் நல்லெண்ணத்தை அடையாளபடுத்தும் முகமாக இராணுவம் இந் நிகழ்வில் கலந்து கொண்டது. இது நாட்டின் செழிப்புக்கு ஆசீர்வாதங்களைத் தூண்டுவதாகவும் அமைந்தது. ‘
இப்தார்’ நோன்பு துறப்பதற்கான பிரார்த்தனைகளுக்குப் பிறகு, முதலாம் படையணி தளபதியும் பொதுப்பணிப் பணிப்பாளர் நாயகமும், சிரேஷ்ட அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விருந்துபசாரத்தில் பங்கேற்று நடைமுறையை அடையாளப்படுத்தினர்.