Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd October 2022 10:01:15 Hours

முதலாம் படையணி தலைமையகத்தின் ஒருவருட பூர்த்தியும், கிளிநொச்சி மாணவர்களுக்கு கற்றல் ஊக்குவிப்பு தொகைகளும்

இலங்கை இராணுவத்தின் விசேட திறமையான ரிசர்வ் ஸ்ட்ரைக் பிரிவுகள், விசேட அதிரடிப் படை மற்றும் ஏனைய ஆயுத படையலகுகளின் கூறுகளை ஒன்றிணைத்தது உறுவாக்கப்பட்ட கிளிநொச்சி முதலாம் படையணி தலைமையகமானது அதன் முதலாவது ஆண்டு நிறைவினை (21) காலை கொண்டாடியது. இந்த நிகழ்வில் முதலாம் படையணி தளபதியின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாகக் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அன்றை தினம் வருகை தந்த தளபதியை மேஜர் ஜெனரல் ஏ.கே.ஜி.கே.யு.ஞானரத்ன என்.டி.சி பி.எஸ்.சி அவர்கள் வரவேற்றதுடன் முதலாம் படையணியின் 2 வது கமாண்டோ படையணி சிப்பாய்களால் தலைமையக வளாகத்தின் நுழைவாயிலில் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, முதலாம் படையணி தளபதி இராணுவத் தளபதியை அணிவகுப்பு மைதானத்திற்கு அழைத்து சென்றதுடன் அவருக்கு முதலாம் படையணி படையினரால் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.அணிவகு மரியாதை முடிவில், இராணுவத் தளபதி முதலாம் படையணி அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.பின்னர், ஆண்டு நிறைவை முன்னிட்டு தளபதியின் வருகையை நினைவுகூரும் வன்னம் முகாம் வளாகத்தில் சந்தன மரக்கன்று இராணுவத் தளபதியினால் நடப்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு 9 வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் 'நெலும் பியச' கேட்போர் கூடத்தில் மேஜர் ஜெனரல் ஏ.கே.ஜி.கே.யு.ஞானரத்ன என்.டி.சி பீஎஸ்சீ அவர்கள் வரவேற்புரை வழங்கியதுடன், கிளிநொச்சி பிரதேசத்தில் வரிய 53 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.

அதன்படி, ஒவ்வொரு புலமைப்பரிசில் பெறும் மாணவருக்கும் வலயக் கல்வி அலுவலகம் மற்றும் அந்தந்த அதிபர்களுடன் கலந்தாலோசித்து முதலாம் படையணி தலைமையகத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட உயர் படிப்பை தொடர்வதற்கான ஒரு வருட காலத்திற்கு ஒவ்வொரு மாதமும் ரூபா 2000 வழங்கப்பட்டது.

அன்றைய பிரதம அதிதியான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் முதலாம் படையணி தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து அன்றைய நிகழ்வின் மேலும் ஒரு சிறப்பம்சமாக கிளிநொச்சி மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் அந்த புலமைப்பரிசில்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, ஆண்டு நிறைவு ஏற்பாடுகளுடன் இடம் பெற்ற முதலாம் படையணி பிரிவினரால் நடாத்தப்பட்ட 'கிளொரி ஆஃப் கிளிநொச்சி' கலைப் போட்டியில் சிறப்பாகச் செயற்பட்ட மாணவர்களுக்கான சான்றிதழ்களை இராணுவத் தளபதி வழங்கினார்.

கிளிநொச்சியில் உள்ள இளம் மாணவர்களின் கலைத்திறனை மேலும் மேம்படுத்தும் நோக்கில் முதலாம் படையணி, 66 பாடசாலைகளில் இருந்து 225 மாணவர்கள் இதில் கலந்து கொண்டதுடன் சிறந்த சாதனையாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் பண ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அன்றைய பயணத்தின் மேலும் ஒரு பகுதியாக, முதலாம் படையணி தளபதி, முதலாம் படையணியின் ஆண்டு விழாவிற்கு இணையாக நடைபெற்ற ஆண்டுவிழா விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களின் தொடரில் கலந்துகொண்ட முதலாம் படையணி சிப்பாய்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஆண்டுவிழாவின் முக்கியத்துவத்தை சேர்க்கும் வகையில், எந்த நிகழ்வுக்கும் முதலாம் படையணி சிப்பாய்களின் வீரம் நிறைந்த அனைத்து நேரத் தயார் நிலையையும் எடுத்துக்காட்டும் வகையிலான முதலாம் படையணி பாடல் வெளியிடப்பட்டது. பாடலின் முதலாவது சீடி (CD) பிரதி முதலாம் படையணி தளபதியினால் அன்றைய பிரதம அதிதிக்கு வழங்கப்பட்டது.

பின்னர், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் கூட்டத்தில் உரையாற்றியதுடன், முதலாம் படையணி படையினருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அது நிர்மாணிக்கப்பட்டு கடந்த ஒரு வருடத்தில் ஆற்றிய பாத்திரங்களையும் பணிகளையும் பாராட்டினார். அவசரநிலை, பாதுகாப்பு, இயற்கைப் அனர்த்தம் அல்லது வேறு எந்த வகையிலும் நாட்டில் எந்த சவாலையும் எதிர்கொள்ள அவர்கள் எப்போதும் தயாராக இருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.'விரைவு, வீரியம், வீரம்' என்ற முதலாம் படையணியின் பொன்மொழியுடன் செல்லும் அந்த பொறுப்புகள் நாட்டிற்கும் அதன் மக்களின் நலனுக்காகவும் செய்யப்படுகின்றன என்றும் தனது உரையில் தளபதி கூறினார்.

அதே நேரத்தில் முதலாம் படையணி தலைமையக வளாகத்தின் நீண்டகாலத் தேவையை நிறைவேற்றும் முகமாக சிப்பாய்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய புதிய கோப்ரல் கிளப்பினை திறந்து வைக்க இராணுவத் தளபதி அழைக்கப்பட்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தை ரிப்பன் நாடா வெட்டி திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து தளபதி முதலாவது படையணியின் வரவேற்பாளர் புத்தகத்திலும் தனது எண்ணங்களை பதிவு செய்தார்.

அன்றைய நாள் நிகழ்வின் முடிவில், முதலாம் படையணி தளபதியவர்கள், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார். அத்தோடு அதிக பணிச்சுமை இருந்த போதிலும், ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டமைக்கு நன்றி தெரிவித்தார்.

ஒரு வயதான முதலாம் படையணியில், 53 வது படைப்பிரிவு, 58 வது படைப்பிரிவு, கொமாண்டோ பிரிகேட், விஷேட படையணி மற்றும் சில ஆயுத படையலகுகள் காணப்படுகின்றன. எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்கொள்ள அல்லது திடீர் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு தீவிர இராணுவ இருப்பு அமைப்பாக இது செயல்படுகிறது. முக்கிய இராணுவத்திலிருந்து அழைப்பு அடிப்படையில் செயல்படும் போது அவர்களின் இராணுவத் திறன்களையும் தயார்நிலையையும் பராமரிக்கவும். தற்கால பாதுகாப்பு இயக்கவியல், இயற்கை பேரழிவுகள் போன்றவற்றின் போது, இராணுவ வரலாற்றில், இந்த ஒருங்கிணைந்த வகையிலான மிக உயர்ந்த தந்திரோபாய சண்டை உருவாக்கம், ரிசர்வ் ஸ்ட்ரைக் படைகள் மற்றும் சிறப்பு அதிரடிப் படைகள் ஒரு படைப் பெருக்கியாக முதலாம் படையணி ஒரு கட்டளையின் கீழ் வந்தது இதுவே முதல் முறை மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள், தொற்றுநோய்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது பிற தேசிய அவசரநிலைகளின் போது தயார் நிலையில் உதவுவதற்காக இந்தப் படையணி அமைக்கப்பட்டுள்ளது.