Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st August 2022 20:04:43 Hours

முதலாம் படையணியின் விரிவுரை திட்டம் ஆரம்பம்

கிளிநொச்சி முதலாம் படையணி தலைமையகம் அனைத்து இராணுவ வீரர்களுக்கும் போதைப் பொருளின் ஆபத்துக்கள் மற்றும் போதைப்பொருளில் இருந்து தடுப்பதன் முக்கியத்துவம் குறித்து தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான விரிவுரையை வியாழக்கிழமை (25) முதலாம் படையணி தலைமையக வளாகத்தில் ஏற்பாடு செய்தனர்.

இவ்விரிவுரையை இராணுவ வைத்தியசாலையின் உளவியலாளர் ஆலோசகர் பிரிகேடியர் ( டொக்டர்) ஆர்.எம்.எம் மொனராகல மற்றும் இராணுவ மனநலப் பிரிவில் உள்ள அவரது குழுவினர் வழங்கினர். நிகழ்ச்சியின் போது, பங்கேற்பாளர்களுக்கு மது மற்றும் போதைப்பொருள் பாவனையைத் தடுப்பது குறித்து கற்பிக்கப்பட்டது.

முதலாம் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன அவர்கள் இந்த திட்டத்திற்கு தனது ஆசீர்வாதங்களை வழங்கினார். மேலும் இராணுவ வழங்கள் பிரிவுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் மற்றும் அதன் கீழுள்ள படையினர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

முதலாம் படையணி தலைமையகம் மற்றும் வழங்கள் பிரிவுகளைச் சேர்ந்த மொத்தம் 259 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றினர்.