03rd September 2020 11:01:51 Hours
மீன்பிடி தொழிலாளிகள் மேற்கொள்ளும் பொது பாதுகாப்பு விடயங்கள். சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகள் மற்றும் முல்லைத்தீவு கடலோரப் பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகள் மாசுபடுதல் போன்ற பிரச்சினைகளை உள்ளடக்கி இம் மாதம் (2) ஆம் திகதி 593 ஆவது படைத் தலைமையகத்தில் ஆராய்வு கூட்டம் இடம்பெற்றது.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக மற்றும் 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களது தலைமையில் இந்த ஒன்றுகூடல் இடம்பெற்றது. இதன் போது நீர்கொழும்பு, சிலாபம் மற்றும் உடப்பிலிருந்து வருகை தந்து நீதி விரோதமாக மீனவர்களால் ஏற்படும் மீன்பிடி இடையூறுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
மேலும் இந்த ஒன்றுகூடலில் 593 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் வசந்த பாலம்கும்புர, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் 36 மீன்பிடி தொழிலாளிகள் பங்கேற்றிக் கொண்டனர். best Running shoes brand | Nike