Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th April 2025 20:28:21 Hours

மியான்மரில் அவசரகால முயற்சிகளுக்கு உதவ முப்படைகள் நிறுத்தம்

மியன்மாரில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அவசரகால நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக முப்படையினரின் குழுவொன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 2025 ஏப்ரல் 05 அன்று புறப்பட்டது.

மியன்மாருக்கான நிவாரணப் படைகளின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் எச்.கே.பீ கருணாதிலக்க ஆர்எஸ்பீ தலைமையிலான குழுவில் இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 6 அதிகாரிகள் மற்றும் 20 சிப்பாய்கள், இலங்கை கடற்படையைச் சேர்ந்த 01 அதிகாரி மற்றும் 02 சிப்பாய்கள் மற்றும் இலங்கை விமானப்படையில் இருந்து 01 அதிகாரி 02 சிப்பாய்கள் உள்ளனர்.

உதவிக்கான மியான்மரின் அழைப்புக்கு பதிலளிக்கும் விதமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும், மனிதாபிமான நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவளிக்க இந்த குழு அனுப்பபட்டுள்ளது.

வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் எஸ்.ஏ ஹெட்டிகே ஆர்எஸ்பீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் விமான நிலையத்தில் புறப்பட்ட படையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.