12th May 2023 18:30:46 Hours
மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத் தளபதி பிரிகேடியர் டபிள்யூஎஸ்கே லியனவடுகே ஆர்எஸ்பீ அவர்களின் தலைமையில் இளம் அதிகாரிகளின் பாடநெறி - 68 (2023-11) மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் புதன்கிழமை (10) நிறைவு பெற்றது.
ஒரு மாத காலத்திற்கும் மேலாக இடம்பெற்ற பயிற்சி நெறியில் இலங்கை இராணுவத்தில் உள்ள பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 70 இளம் அதிகாரிகள் பங்குபற்றினர். இப் பயிற்சி நெறி அடிப்படை காலாட்படை ஆயுதங்கள் தொடர்பான கோட்பாட்டு மற்றும் நடைமுறைகள் அமர்வுகளைக் கொண்டிருந்தது.
பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கும் முன் தளபதி அவர்கள் நிறைவுரை ஆற்றினார். இந்நிகழ்வில் பயிற்றுவிப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.