22nd May 2024 17:28:44 Hours
மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நந்தனி சமரகோன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரவினரால் மூக்குகண்ணாடிகள் வழங்கும் நன்கொடை நிகழ்வு 17 மே 2024 அன்று படையணி தலைமையகத்தில் நடத்தப்பட்டது.
இத்திட்டத்திற்கு டிஎஸ் ஜயசிங்க ஒப்டிகல் தனியார் நிறுவனத்தினர் நிதி உதவி வழங்கினர். இதன் மூலம் 100 இராணுவ மற்றும் சிவில் ஊழியர்கள் பயனடைந்தனர்.
இத் திட்டம் வெற்றியடைய நிலைய தளபதி, பணி நிலை அதிகாரி, மற்றும் சிப்பாய்கள் தங்களின் ஒத்துழைப்பை வழங்கினர்.