27th September 2023 21:08:09 Hours
மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் பிரிகேடியர் எஸ்ஏஎன்ஜே ஆரியசேன அவர்கள் ஜயவர்தனபுர, இராணுவத் தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்ற நிகழ்வின் போது தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
புதிய பணிப்பாளர் தனது புதிய அலுவலகத்திற்கு வந்தவுடன் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் முன்னிலையில் தனது புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
இந்த புதிய நியமனத்திற்கு முன்னர் பிரிகேடியர் எஸ்ஏஎன்ஜே ஆரியசேன அவர்கள் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் நிலைய தளபதியாக கடமையாற்றினார்.