Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th April 2025 10:18:20 Hours

மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தினால் விழிப்புணர்வு நிகழ்ச்சி எற்பாடு

மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகம், மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு உயிரி மருத்துவ எரிவாயு அமைப்பின் பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை 2025 ஏப்ரல் 22 அன்று நாரஹேன்பிட்டா மருத்துவமனையில் நடாத்தியது.

தேசிய உயிரியல் தனியார் நிறுவனத்தின் பராமரிப்பு பொறியியலாளர் இந்த அமர்வை வழிநடத்தினார். உயிரியல் வாயுக்களின் வகைகள், எரிவாயு மற்றும் வெற்றிட அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் எச்சரிக்கை வழிமுறைகள் உள்ளிட்ட முக்கிய தலைப்புகளை இந்த பட்டறை உள்ளடக்கியிருந்தது.

இப்பட்டறையில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.