Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd April 2021 06:00:52 Hours

மினுஸ்மா கிழக்கு தளபதி நாடு திரும்பும் இலங்கை வீரர்களுக்கு பாராட்டு

மாலி ஜநா அமைதி காக்கும் பணிகளில் கடந்த ஆறு மாதங்களாக ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவத்தின் 2 வது அமைதி காக்கும் குழுவினர் தங்களது வெற்றிகரமான 22 வழங்கல் நடவடிக்கைகளை நிறைவு செய்துகொண்டு வியாழக்கிழமை (22) நாடு திரும்பினர்.

மேற்படி குழுவினர் நாடு திரும்புவதற்கு முன்பதாக மாலி நாட்டு கிழக்கு அமைதிகாக்கும் குழுவின் தளபதி சிரேஸ்ட கேணல் ஜு ஜின்சோங் இலங்கை அமைதிகாக்கும் குழுவின் அலுவலகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை அமைதிகாக்கும் குழுவின் பணிகளுக்கு பாராட்டு தெரிவித்த அவர் தொழில்முறை ஒழுக்கம் பற்றி எடுத்துரைத்ததோடு, இலங்கை அமைதிகாக்கும் படையினர் தங்கியிருந்த காலத்தில் மறைந்திருந்து தாக்குதல்களை எதிர்கொள்ளும் முறைகளையும் பாராட்டினார். மேற்படி பகுதியில் மேற்கொள்ளப்படும் அமைதி காக்கும் பணிகளே உலகில் மிகக் கடுமையான அமைதிகாக்கும் பணியாக கருதப்படுகிறது.

அதனையடுத்து படைமுகாமின் தளபதியான லெப்டினன் கேணல் ஸ்ரீநாத் கால்லகே அவர்கள் கிழக்கு தளபதிளை சந்தித்து தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கு அவர் வழங்கி ஒத்துழைப்புகளுக்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர் கிழக்கு தளபதி தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதுடன், புத்தாண்டு இனிப்பு வகைகளை சுவைத்துடன் குழு படம் எடுக்கும் நிகழ்வின் பின்னர் தனது எண்ணங்களை பகிர்ந்துகொண்டார்.