19th August 2024 22:18:46 Hours
மித்ர சக்தி பயிற்சியில் பங்கேற்கும் படையினரிடையே ஒத்துழைப்பு, தோழமை உணர்வை வளர்ப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், இலங்கை மற்றும் இந்தியா வீரர்களின் கலப்பு இரு அணிகளின் பங்குபற்றுதலுடன் நட்புறவு கரப்பந்தாட்ட போட்டி நடாத்தப்பட்டது.
கடும் போட்டிக்கு மத்தியில், மேஜர் டிஎம்எஸ்எச் . திசாநாயக்க தலைமையிலான ‘ஏ’ அணி சாம்பியன்ஷிப்பை வென்றதுடன் 'பி' அணி 2-1 என்ற புள்ளி அடிப்படையில் இரண்டாம் இடத்தைபெற்றது.
மித்ரசக்தி' பயிற்சியின் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் உடுகம யூகேடிடிபீ உடுகம ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் வெற்றியாளர்களுக்கு அவர்களின் சிறந்த செயல்திறனுக்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் வெற்றி பெற்ற அணிக்கு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்திய வீரர் லான்ஸ் நாயக்சோனு கான், போட்டியில் அவரது சிறப்பான திறமையை காண்பித்து சிறந்த வீரருக்கான விருது பெற்றார்.
இரு நாடுகளைச் சேர்ந்த படையினரின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், துடிப்பான நிகழ்வுகள் மற்றும் கண்கவர் தீ பாசறை நிகழ்ச்சியில் மாலை வண்ணமயமாக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மித்ரசக்தி' பயிற்சியின் பணிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.