Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd February 2020 12:51:08 Hours

மாலைதீவு பாதுகாப்பு படை அங்கத்தவர்களுக்கு இலங்கை இராணுவத்தினரால் பயிற்சிகள்

இலங்கை இராணுவத்தின் பொறியியல் படையணியினால் மாலைதீவு தேசிய பாதுகாப்பு படையணிக்கு வெடிகுண்டு மற்றும் குண்டு செயலிழப்பு தொடர்பான அடிப்படை பயிற்சிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த பயிற்சி பாடத்திட்டத்தில் மாலைதீவு பாதுகாப்பு படையினர்களைச் சேர்ந்த அதிகாரிகள், படையினர்கள் பங்கேற்றிக் கொண்டு பயிற்சிகளை நிறைவு செய்தனர். இவர்களுக்கு பயிற்சி நிறைவு பரிசளிப்பு நிகழ்வானது இம் மாதம் 16 ஆம் திகதி மாலைதீவில் இடம்பெற்றது. இந்த பயிற்சியில் சிறந்த பெருபேறுகளை மாலைதீவு கடலோர படையைச் சேர்ந்த லெப்டினன்ட் அப்துல்ல ஷாகிட் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கை இராணுவ பொறியியல் பிரிக்கட் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் நிஹால் அமரசேகர அவர்கள் வருகை தந்து பயிற்சிகளை நிறைவு செய்த அதிகாரிகள் மற்றும் படை வீரர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்து கௌரவித்தார்.

பின்னர் பிரதம அதிதி அவர்களினால் பயிற்சிகளை நிறைவு செய்த பாதுகாப்பு படை அங்கத்தவர்களது மத்தியில் உரையை நிகழ்த்தினார். இதன்போது இவர்களுக்கு கிடைக்கப்பெற்ற பயிற்சி வாய்ப்புக்கள் தொடர்பாக வாழ்த்துக்களை தெரிவித்து பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பொறியியல் படையணியின் படைத் தளபதியும் தொண்டர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன அவர்களை பிரதிநிதித்துவ படுத்தி இவர் மாலைதீவு குடியரசின் பாதுகாப்பு தலைமை பிரதானி மேஜர் ஜெனரல் அப்துல்லா ஷம்மல் அவர்களுக்கு எமக்கு வழங்கிய சந்தர்ப்பத்தை முன்னிட்டு நன்றிகளை தெரிவித்தார்.

இந்த பயிற்சிகள் நான்கு மாதம் பதின்மூன்று நாட்களாக மாலைதீவு பாதுகாப்பு படை அங்கத்தவர்களுக்கு இலங்கை பொறியியல் படையணியினால் மேற்கொண்டதை முன்னிட்டு இலங்கை இராணுவத்திற்கு மாலைதீவு பாதுகாப்பு பிரதானியினால் கடிதங்கள் மூலம் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. .

பண்டாரா கோஷியில் உள்ள மாலைதீவு கூட்டு தலைமையகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பாதுகாப்புப் படைத் பிரதானி மேஜர் ஜெனரல் அப்துல்லா சாமல், பாதுகாப்புப் படை பிரதித் தளபதி. ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப், பிரிகேடியர் ஜெனரல் வைஸ் வாகீத், கட்டளை அதிகாரி சி.டி.எஸ்.எஸ். சேவை தளபதிகள், எம்.என்.டி.எஃப் இன் மூத்த அதிகாரிகள், அதிகாரிகள், ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள், கொமிஷன் பெறாத சிரேஷ்ட படை வீரர்கள் மற்றும் சாதாரண படை வீரர்கள் இந்த பயிற்சி நெறிகளில் ஈடுபட்டு பயிற்சிகளை நிறைவு செய்தார்.

சுரங்கங்கள், வெடிபொருட்கள் மற்றும் கைக்குண்டு ஆபரணங்களைக் கையாளுதல், , வெடிகுண்டுகள் மற்றும் மேம்பட்ட வெடிபொருள் சாதனங்கள் (ஐ.இ.டி), ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை அழித்தல், ஈ.ஓ.டி மற்றும் யுஎக்ஸ்ஓக்கள் தொழில்நுட்ப மற்றும் தந்திரோபாய தகுதி வாய்ந்த அடிப்படை மற்றும் மேம்பட்ட ஈஓடி மற்றும் ஐஇடிடி கையாளுபவர்களாக எந்தவொரு இழப்பும் வராது கையாளுதல் போன்ற விடயங்களை உள்ளடக்கி இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பயிற்சிகள் இரண்டு அடிப்படை முறையில் இடம்பெற்றன அடிப்படை பயிற்சியானது 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி முதல் 2019 டிசம்பர் மாதம் வரை 35 பாதுகாப்பு படை அங்கத்தவர்களது பங்களிப்புடனும், அடுத்தது பயிற்சியானது 2020 ஆம் ஆண்டு 5 ஆம் திகதி தொடக்கம் 2020 ஆம் ஆண்டு பெப்ரவாரி மாதம் 16 ஆம் திகதி வரை தொழில்நுட் குண்டு செயலிழப்பு பயிற்சிகள் 21 அங்கத்தவர்களது பங்களிப்புடன் இடம்பெற்றன.

இந்த பயிற்சிகளின் இறுதிகள நடவடிக்கை பயிற்சிகள் பெப்ரவாரி மாதம் 9 – 14 ஆம் திகதி வரை DHE MAKARU வில் இடம்பெற்றன.

இலங்கை இராணுவத்தின் பொறியியல் படையணியின் லெப்டினன்ட் கேர்ணல் சந்தன விக்ரமநாயக அவர்களது தலைமையில் மேஜர் கிரிஷாந்த புஷேவெல, மேஜர் பிரியந்த கொடிதுவக்கு, மேஜர் ஜானக குணவர்தன, கெப்டன் பன்சல் குணசேகர, ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் ஐ.கே.எம் வீரரத்ன, ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 11 எம்.எம் சமந்த பண்டார, ஆணைச்சீட்டு உத்தியோகத்தர் 11 வி.பி.ஆர்.என் குமாரசிறி, பதவிநிலைச் சாஜன் எச்.எம்.எஸ்.பி.கே கருணாரத்ன மற்றும் கோப்ரல் எச்.ஜி.சி நிஷாந்த போன்றோரது பங்களிப்புடன் மாலைதீவு பாதுகாப்பு படையினர்களுக்கு இந்த பயிற்சிகள் வழங்கி வைக்கப்பட்டன. latest Running | Air Jordan Release Dates Calendar