Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th July 2024 09:44:46 Hours

மாலி பணியின் வெற்றிகரமான நிறைவின் பின் இரண்டாவது இலங்கை பாதுகாப்பு குழு நாடு திரும்பல்

மாலி - மினுஸ்மா பணிகளின் நிறைவை அடுத்து இரண்டாவது இலங்கை பாதுகாப்பு குழு 23 ஜூலை 2024 அன்று இலங்கையை வந்தடைந்தது.

13 அதிகாரிகள் மற்றும் 90 சிப்பாய்கள் அடங்கிய 103 பேரை கொண்ட இராணுவ குழு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

வருகை தந்த படையினரை இலங்கை தொண்டர் படையணி தளபதியும் இலங்கை இராணுவ சிங்க படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, பொது பணி பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்எஎன்டி எதிரிசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர்.

மேலும், முதலாவது இலங்கை பாதுகாப்பு குழுவின் 7 அதிகாரிகளும் 97 சிப்பாய்களும் 22 ஜூலை 2024 அன்று இலங்கையை வந்தடைந்தனர். 2017 ஆம் ஆண்டு முதல், மாலியில் உள்ள இலங்கை அமைதி காக்கும் படையினர், நாட்டின் அந்நிய செலாவணியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இறுதியாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை இராணுவ சிங்க படையணி படைத் தளபதியிடம், மாலியின் நடவடிக்கைகளின் முடிவைக் குறிக்கும் வகையில், ஐ.நா கொடி அமைதிகாக்கும் படை தளபதியினால் கையளிக்கப்பட்டது.