Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th November 2019 14:26:07 Hours

மாலி அமைதி காக்கும் நடவடிக்கைப் பணிக்கான படையினரை சந்தித்த இராணுவத் தளபதி

இலங்கை இராணுவத்தின் 243 படையினர் ஐக்கிய நாடுகளின் மாலி நாட்டிற்கான (மினுஸ்மா) அமைதி காக்கும் நடவடிக்கைப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கில் செல்லவுள்ள இப் படையினரை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று காலை (06)போயகனையில் உள்ள விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

மேலும் இவ் நடவடிக்கைப் பணிகளில் 13இராணுவ படைப் பிரிவுகளன் 20 அதிகாரிகள் மற்றும் 223 படையினர் போன்றோர் இப் பணிகளில் ஈடுபடும் நோக்கில் மாலி நாட்டிற்கான பயணத்தை 12-13ஆம் திகதிகளில் நவம்பர் மாதம் மேற்கொள்ளவுள்ளதுடன் முன்னரே இப் பணிகளை மேற்கொள்ளளும் நோக்கில் மாலி நாட்டிற்கு சென்ற 181 படையினர் எதிர்வரும் வியாழக் கிழமை (14) வருகைதரவுள்ளனர்.

அந்த வகையில் போயகனை விஜயபாகு காலாட் படையணித் தலைமையகத்திற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இப் படைத் தலைமையக பிரதி தளபதியான பிரிகேடியர் பி எம் ஆர் எச் எஸ் கே ஹேரத் அவர்களால் வரவேற்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பு மரியாதை நிகழ்வும் இதன் போது இடம் பெற்றது.

அதன் பின்னர் இப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் ஆர் கே பி எஸ் கெடகும்புர அவர்கள் இராணுவத் தளபதியவர்களை வரவேற்றார். அந்த வகையில் 20 அதிகாரிகள் மற்றும் 223 படையினர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராணுவத் தளபதியவர்களை வரவேற்றதுடன் மேலும இவ் மாலி நடவடிக்கைப் பணியின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேர்ணல் பி ஜி சி எஸ் கால்லகே மற்றும் இரண்டாம் கட்டளை அதிகாரியான மேஜர் என் வி ஏ எம்ட விதானகே போன்றோர் வரவேற்றனர்.

மேலும் போயகனையில் 13 படைப் பிரிவுகளை உள்ளடக்கி கலந்து கொண்ட இப் படையினருடனான குழுப் புகைப் படமும் எடுக்கப்பட்டது. மேலும் இந் நடவடிக்கைப் பணிகளில் விஜயபாகு காலாட் படையினர் இலங்கை தேசிய பாதுகாப்பு படையினர் இலங்கை பீரங்கிப் படையினர் இலங்கை பொறியியல் படையினர் இலங்கை சமிக்ஞைப் படையினர் இலங்கை சிங்கப் படையினர் இலங்கை சேவைப் படையினர் இலங்கை இராணுவ போர்கருவிப் படையணி இலங்கை மின்சாரவியல் பொறியியல் படையணி இலங்கை பொலிஸ் படையணி மற்றும் இலங்கை மருத்துவப் படையணி போன்றோர் காணப்படுகின்றனர்.

அந்த வகையில் முதல் 43 அமைதி காக்கும் நடவடிக்கைப் பணிக்காக12ஆம் திகதி நவம்பர் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதுடன் மேலும் 200 படையினர் 13ஆம் திகதி நவம்பர் மாதம் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். மேலும் மாலியில் சேவையாற்றும் 196 (பிரிவு – 11) இனர் எதிர்வரும் வியாழக் கிழமை (14) நாடு திரும்பவுள்ளனர். Sports brands | jordan Release Dates