Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th December 2021 15:00:43 Hours

மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்புக்கு ‘ரணவிரு எப்பரல்’ நிறுவனத்தில் ஆண்டு பூர்த்தி நிகழ்வில் பாராட்டு

யக்கல ரணவிரு எப்பரல் நிறுவனத்தின் (இராணுவ ஆடை தொழிற்சாலை) 23 வது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் டிசம்பர் 9 முதல் 10 வரை அனைத்து ஊழியர்களினதும் பங்கேற்புடன் பல மத வழிபாட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதற்கமைய யக்கல முகாம் வளாகத்தினுள் வியாழன் (9) அன்று, இடம்பெற்ற ‘போதி பூஜா பிங்கம’ நிகழ்வின் பின்னர் இந்திகொல்ல வித்யாவங்ச பிரிவேனாவின் வண. உடுதும்பர மெதவன்ச தேரரினால் ஆற்றப்பட்ட தர்ம போதனைகளில் நிறுவனத்தின் ஊழியர்கள் பலரும் கலந்துக் கொண்டிருந்ததோடு, போரில் உயிர் நீத்த வீரர்களின் ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனைகளின் நிறைவில் ரணவிரு எப்பரல் தொழிற்சாலையில் பணிபுரியும் மாற்றுத்திறனாளி போர் வீரர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.

மறுநாள் (10) இந்திகொல்ல வித்யாவன்ச பிரிவென பிக்குகளுக்கான அன்ன தானம் வழங்கும் நிகழ்வொன்றும் இடம்பெற்றது.

பின்னர் ரணவிரு எப்பரல் நிறுவனத்தின் ஆண்டு விழா நிகழ்வுகள் நிறுவன தளபதி பிரிகேடியர் அஷாத் இசதீன் அவர்களின் வருகையின் போது வழங்கப்பட்ட பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் ஆரம்பமானதுடன், நிறுவனத்தின் பிரதி தளபதி பிரிகேடியர் அமில வாசகே மற்றும் நிறுவன முகாமையாளர் கேணல் டைடஸ் ஜயகொடி ஆகியோரால் தளபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

ரணவிரு எப்பரல் நிறுவனத்தின் ஆண்டுவிழா நிகழ்வில் அதன் முக்கியத்துவம் குறித்து உரையாற்றிய தளபதியவர்கள் அங்கவீனமான போர் வீரர்களால் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக வழங்கப்படும் பெறுமதியான பங்களிப்புக்கும் அதன் தரத்தை உயர்ந்த அளவில் பராமரித்து வருகின்றமைக்கும் நன்றிகளை கூறிக்கொண்டார்.

நிறுவனத்தின் 23 வது ஆண்டு பூர்த்தி நிகழ்வு மற்றும் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்ற தினங்களில் நிறுவன ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.