Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd August 2023 23:56:00 Hours

மாதுரு ஓயா இராணுவ பயிற்சி பாடசாலையின் அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் பயிற்சி நிறைவு

எதிர்ப்பு கிளர்ச்சி மற்றும் வனப்போர் அதிகாரி பாடநெறி எண்-32, மற்றும் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் எதிர்ப்பு கிளர்ச்சி மற்றும் வன போர் பாடநெறி எண்-34 மற்றும் ஆகியவற்றின் பயிற்சி நிறைவின் அணிவகுப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை (28 ஜூலை 2023) மாதுரு ஓயாவில் உள்ள இராணுவ பயிற்சி பாடசாலையில் நடைபெற்றது.

எதிர் கிளர்ச்சி மற்றும் வன போர் அதிகாரிகள் பாடநெறி 27 அதிகாரிகளல் இரண்டு விமானப்படை அதிகாரிகள் மற்றும் 1 கடற்படை அதிகாரியும் அடங்குவர். அடுத்த பாடநெறியில் அனைத்து படையணிகளையும் சேர்ந்த 55 சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகள் இப் பயிற்சியை பின்பற்றினர்.

7 வது இராணுவ களப் பொறியியல் படையணியின் கெப்டன் எஸ்ஏஎம்ஏகேசீ சேனாநாயக்க சிறந்த மாணவர் அதிகாரியாகவும், 3 வது (தொ) கெமுணு ஹேவா படையணியின் லான்ஸ் கோப்ரல் டிஎம்எஸ் சதுரங்க சிறந்த மாணவருக்கான விருதையும் பிரதம அதிதியான இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யுஎஸ்பீ, அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.