Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th March 2019 09:24:25 Hours

மாதுருஓயா இராணுவ பயிற்ச்சி கல்லூரியின் புதிய கட்டளை தளபதியாக பிரிகேடியர் செனரத் நிவன்கெல்ல பதவியேற்பு

மாதுருஓயா இராணுவ பயிற்ச்சி கல்லூரியின் புதிதாக நியமிக்கப்பட்ட கட்டளை தளபதி பிரிகேடியர் செனரத் நிவுன்கெல்ல அவர்கள் 34ஆவது கட்டளை தளபதியாக பதவியேற்கும் நிகழ்வு (25) ஆம் திகதி திங்கட்கிழமை சமய சம்பிரதாய முறைப்படி இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து புதிய கட்டளை தளபதிக்கு நுலைவாயில் மரியாதை வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து இராணுவ சிரேஷ்ட அதிகாரிகளால் வரவேற்கப்பட்டார். பின்னர் இராணுவ சம்பிரதாய முறைப்படி மங்கள விளக்கேற்றியதுடன் உத்தியோகபூர்வ ஆவணத்தில் தனது கையொப்பத்தினை வைத்தார். அத்துடன் பௌத்த மத மகா சங்க தேரர்களால் செத் பிரித் பூஜையும் இடம் பெற்றன.

மேலும் இப் பயிற்ச்சி கல்லூரி வளாகத்தில் “நா” மரக் கன்று ஒன்று புதிய தளபதியினால், தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொள்வதற்கு முன்னர் நடப்பட்டது.

இந்த நிகழ்வில் இப் பயற்ச்சி கல்லூரியில் உள்ள அதிகாரிகள் மற்றும் படையினருக்கு உரையாற்றியதுடன் அவர்களின் ஒத்துழைப்பு தொடர்பாகவும் தனது கருத்துக்களை தெரிவித்துக் கொண்டார். latest Running | NIKE AIR HUARACHE