Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th July 2018 11:34:52 Hours

மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்ச்சி பட்டறை

பண்டாரவள காரடாகொல்ல மகா வித்தியாலயத்தின் பிரதான அதிபர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இப் பாடசாலை மாணவர்களின் 'தலைமைத்துவத்தை மேம் படுத்தும் நோக்குடன் (16) ஆம் திகதி திங்கட்கிழமையன்று மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர்களால் பாடசாலை மாணவர்களுக்கான 'தலைமைத்துவத்தின்' பயிற்ச்சி பட்டறை நடத்தப்பட்டது.

இத் திட்டமானது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் அவர்களின் ஆசீர்வாதத்துடனும் இராணுவ பயிற்றுனர்களினால் இப் படைத் தலைமையகத்தின் சிவில் விவகாரங்களின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த இராணுவ முன்னோடி படையணியின் லெப்டினன்ட் கேர்ணல் டபில்யூ. எம். ஆர்.பி விஜேசுந்தர அவர்களினால் விரிவுரைகள் வழங்கப்பட்டது. இந் திட்டத்தில் 22 மாணவர்கள் பங்கு பற்றியதுடன் ஸ்டப் சார்ஜன்ட் வி.ஏ.ஏ.என் கரவித்த அவர்களினால் இந் நிகழ்விற்கு பங்களிப்பும் வழங்கப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை, உடல் வலிமை, மற்றவர்களுக்கான மரியாதை, அணிகளுக்கான வேலைகள் போன்றவற்றின் முக்கியத்துவத்தை மாணவர்கள் விரிவுரைப் படுத்தினர். இப் பயிற்சி பற்றரையில் பங்கு பற்றிய அணைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டனர்.

Running sport media | Nike