Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

மலேசியா மகளீர் தேசிய கிரிக்கட் அணியை தோற்கடித்து இலங்கை இராணுவ மகளீர் கிரிக்கட் அணி வெற்றியை பெற்றது

இலங்கை இராணுவ மகளீர் கிரிக்கட் அணி மற்றும் மலேசியா மகளீர் கிரிக்கட் அணியினருக்கு இடையில் 20 ஓவர் போட்டியானது ஜூன் மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரை பனாகொடை இராணுவ கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்றது.

கடந்த வியாழக் கிழமை (15) நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் முதலாவது பந்திற்கு துடுப்பாடிய இராணுவ மகளீர் அணியினர் எட்டு விக்கட்டுகளை இழந்து 90 ஓட்டங்களை பெற்றனர. பின்பு தொடர்ந்து ஆடிய மலேசியா மகளீர் அணி ஏழு விக்கட்டுகளை இழந்து 46 ஓட்டங்களை பெற்றனர்.

மேலும் (17) திகதி நடைபெற்ற சுற்றுப் போட்டியில் இராணுவ மகளீர் வீராங்கனைகள் மூன்று விக்கட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை பெற்றனர். மேலும் துடுப்பாடிய மலேசியா மகளீர் அணியினர் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 61 ஓட்டங்களை பெற்றனர்.

நான்காவது போட்டியானது (19) திகதி மலேசியா மகளீர் அணியினருக்கும் இராணுவ மகளீர் அணிக்கும இடையில் நடைபெற்றது. இராணுவ மகளீர் அணியானது 8 விக்கட்டுகளை இழந்து 116 ஓட்டங்களை பெற்று மலேசியா மகளீர் அணியை வென்றது.

ஐந்தாம் போட்டியானது (20) திகதி இடம்பெற்ற நிலையில் இராணுவ மகளீர் படை அணியானது எட்டு விக்கட்டுகளை இழந்து 118 ஓட்டங்களை பெற்றுள்ளது. மலேசியா மகளீர் அணியானது 5 விக்கட்டுகளை இழந்து 66 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இந்த அனைத்து போட்டிகளிலும் இலங்கை இராணுவ அணி சிறப்பாக ஆடி வெற்றியினை பெற்றுள்ளது.

trace affiliate link | Sneakers Nike