Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd September 2021 09:45:35 Hours

மற்றொரு தொகை கடத்தல் மஞ்சள் மற்றும் ஏலக்காய் சந்தேக நபர்களுடன் மீட்பு

இராணுவ புலனாய்வு படையினரின் தகவல்களுக்கு அமைவாக முல்லைத்தீவு 66 வது படைப்பிரிவின் 24 வது விஜயபாகு காலாட்படை படையினர் புதன்கிழமை (22) இரண்டு சந்தேக நபர்களால் கடத்தப்பட்ட 2350 கிலோ மஞ்சள் மற்றும் 50 கிலோ ஏலக்காய் மீட்கப்பட்டது.

சந்தேகத்திற்கிடமான கடத்தல் பொருட்களைக் வைத்திருந்தவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பூநகரின் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் சிப்பாய்கள் கடந்த காலங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பிற இடங்களில் போதைப் பொருட்கள், மஞ்சள் மற்றும் பிற போதைப்பொருட்களை மீட்டுள்ளனர். மேலும் பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.