12th April 2021 21:35:10 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையின் வீட்டுத் திட்டத்தின் கீழ் 2 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையின் மேற்பார்வை மற்றும் முயற்சியால் கட்டப்பட்ட மேலும் ஒரு புதிய வீடு அமைதிக்கான போரின் போது தனது கால்களை தியாகம் செய்த கோப்பரல் ஒருவருக்கு வியாழக்கிழமை (6) வழங்கப்பட்டது.
முன்னாள் படைவீரர் விவகார பணிப்பகம் மற்றும் 2 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையினரின் ஒத்துழைப்புடன் 1.3 மில்லியன் பெறுமதியில் முழுமைப்படுத்தப்பட்ட புதிய வீடு முல்லேரியாவில் நிர்மானிக்கப்பட்டது.
சிறப்பு வீட்டுவசதி திட்டத்தின் பொறுப்பாளரான இலங்கை இலேசாயுத காலாட் படையின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த ஆப்ரூ அவர்கள் இறந்த போர்வீரர்களின் குடும்பங்களின் நலனுக்காகவும், மாற்றுத் திறனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட 20 வீடுகளில் ஒன்றின் கட்டுமானத்தை இலங்கை இலேசாயுத காலாட் படையின் இறந்த வீரர் ஒருவரின் கடும்பத்தின் தேவையினை முன்னுரிமைப்படுத்தி விரைவுபடுத்துமாறு இராணுவ பொறியியலாளர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
அழைக்கப்பட்ட மகா சங்க உறுப்பினர்களின் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் இந்த புதிய வீட்டின் திறப்பு பயனாளியிடம் முன்னாள் படைவீரர்கள் விவகார பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் சந்தன ரணவீர அவர்களால் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் படைப் பேரவை உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.