18th November 2023 00:05:29 Hours
23 வருடங்களுக்கு மேலாக நாட்டிற்கு சேவையாற்றிய இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கேணல் டபிள்யூ.எம்.ஆர் விஜேசுந்தர (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்களின் இராணுவ இறுதிக்கிரியைகள் அவரது இராணுவ தோழர்கள் மற்றும் பெருந்திரளான பொது மக்களுக்கு மத்தியில் வியாழக்கிழமை (16) மாலை பொரளை பொது மயானத்தில் இடம்பெற்றது.
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் இராணுவ தளபதியை பிரதிநிதித்துவபடுத்தி இறுதிச் சடங்கில் கலந்துகொண்டார்.
இராணுவ மரபுகளின்படி இலங்கை இலேசாயுத காலாட் படையினர் உடல் தாங்கி பேழையை பெற்று, துப்பாக்கி வண்டியில் வைக்கப்பட்டு தேசியக் கொடியில் போர்த்தப்படுவதற்கு முன்பு மயானத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் ஆயுத மரியாதை வழங்கினர். இறுதி ஊர்வலம் மயானத்தின் பிரதான நுழைவாயிலை அடைந்ததும், சிரேஸ்ட அதிகாரிகளின் பிரதிநிதிகள் சவப்பெட்டியை சம்பிரதாயமாகப் பெற்றுக்கொண்டு, குடும்ப உறுப்பினர்களுடன் சவப்பெட்டியின் பின்னால் அணிவகுத்து மயானத்தை நோக்கிச் சென்றனர்.
இராணுவத் தளபதியினால் வெளியிடப்பட்ட முறையான சிறப்புப் கட்டளை I நிகழ்வில் துக்கத்தில் இருந்தவர்களுக்கு வாசிக்கப்பட்டது. இராணுவ மரபுகளுக்கு இணங்க படையினர் இறந்தவருக்கு துப்பாக்கி வணக்கம் செலுத்தினர். இது ஒரு இராணுவ அதிகாரியின் மறைவின் போது பெறக்கூடிய மிக உயர்ந்த அஞ்சலி ஆகும்.
கடைசி வாசிப்பிற்கு பிறகு, சிரேஸ்ட வீரர் அவரது நித்திய ஓய்விற்குச் சென்றுவிட்டார் என்பதைக் குறிக்கும் ஒலி எழுப்பப்பட்டதன் பின்னர் உடல் தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
சில வினாடிகளுக்குப் பின்னர், மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களது துக்கமடைந்த குடும்பத்தினருக்கு அவரது அலங்காரங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், பணியில் உள்ள அதிகாரிகள் மற்றும் துக்கப்படுபவர்களும் இறுதியாக மறைந்த அதிகாரிக்கு வணக்கம் செலுத்தினர்.
கேணல் டபிள்யூ.எம்.ஆர் விஜேசுந்தர (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்கள் 1978 ஆம் ஆண்டு ஜூலை 03 ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் அதிகாரி பயிளிலவல் அதிகாரியாக இணைந்து கொண்டதுடன், 1980 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைபாரவணையுடன் இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் நியமிக்கப்பட்டார்.