02nd September 2021 04:30:39 Hours
கடந்த 18 மாதங்களில் நூற்றுக்கணக்கான கொவிட் நோயாளிகளை அவசரகாலத்தில் இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் சாரதி கடமையின் போது சில நாட்களுக்கு முன்பு கொவிட் -19 நோய்த்தொற்றால் இறந்தார். சில தினங்களுக்கு முன்பு இரத்தினபுரி குருவிட்ட கெமுனு ஹேவா (GW) படையணி தலைமையகத்திற்கு அவரது மகளை அழைத்து அவரது கல்வி நடவடிக்கைக்காக விஷேட புலமைப் பரிசினை பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் வழங்கப்பட்டது.
மறைந்த அம்புலன்ஸ் சாரதி திரு. B.A அமரஜீவாவுக்கு ஒரே மகளான குறித்த மாணவியான செல்வி B.A திலினி ஷாஷிபிரபா இரத்தினபுரி பெர்குசன் மகளீர் வித்தியாலயத்தில் உயர் தரம் கற்கின்றார். அவரது அடுத்த இரண்டு வருடங்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும். இராணுவத் தளபதியின் இந்த நல்லெண்ணத்தினை முன்வைத்தப்போது கெமுனு ஹேவா (GW) படையணியின் சேவை வனிதையர் பிரிவு தலைவி (GW SVU) திருமதி நெலும் வடுகே தலைவர் அப்பகுதி நன்கொடையாளரிடமிருந்து பெறப்பட்ட நிதி உதவியுடன் திட்டத்தை செயல்படுத்தினார். இராணுவத் தளபதி சார்பாக, உதவித்தொகை தொடர்பான ஆவணங்கள் கெமுனு ஹேவா (GW) படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் ரோஷன் ஜெயமன்ன பயனாளிக்கு வழங்கினார். இறந்த சாரதியின் விதவை தாயும் குறித்த நிகழ்வில் பங்குபற்றினார்.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் பல வருடங்களாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆம்புலன்ஸ் சாரதி மாகாணத்தில் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் தனது உயிரைப் பணயம் வைத்து கடமையாற்றியமையை அறிந்துக் கொண்ட ஜெனரல் சவேந்திர சில்வா அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் கூறினார். தளபதியின் வழிகாட்டுதலின் பேரில் இறந்தவரின் மகள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெறும் வரையான இரண்டு வருடங்களுக்கு அவரது படிப்பிற்காக மாதாந்தம் ரூபா 6,600 வீதம் வழங்குவதற்கு கெமுனு ஹேவா படையணி தலைமையகம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது.