Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th September 2021 13:30:35 Hours

மருத்துவ அதிகாரிகள் மற்றும் இலங்கை முன்னோடி படையினர் ஏற்பாட்டில் நடமாடும் தடுப்பூசி

60 வயதுக்கு மேற்பட்ட களுத்துரை மாவட்டத்தில் புலத்சிங்கள, பாணந்துறை, இங்கிரிய மற்றும் ஹொரணை பகுதிகளில் இலங்கை இராணுவ நடமாடும் தடுப்பூசித் திட்டம் கடந்த 4 நாட்களில் இலங்கை இராணுவ நடமாடும் தடுப்பூசி வழங்கல் குழு மற்றும் இலங்கை இராணுவ முன்னோடிப் படையின் படையினரால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார வைத்திய அதிகாரிகள் (MOH) இராணுவ நடமாடும் தடுப்பூசி பிரிவினருக்கு தங்கள் ஆதரவை வழங்கினர்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் - 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டங்கள் நாடு முழுவதும் இராணுவ வீரர்களால் முன்னெடுக்கப்படுகின்றது.