22nd September 2021 08:20:35 Hours
கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்கள் 54 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர அவர்களின் ஆதரவுடன் மன்னார் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையை 50 படுக்கைகள் கொண்ட இடைநிலை பராமரிப்பு நிலையமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார். அது வியாழக்கிழமை (23) மன்னார் சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
புனரமைப்பிற்கான நிதி உதவி அரச சுதேச மருத்துவ அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் தொழில்நுட்ப மற்றும் மனிதவள ஆதரவு 54 வது படைபிரிவின் படையினர் மூலம் வழங்கப்பட்டது. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், படைப்பிரிவு தளபதி, 543 வது பிரிகேட் தளபதி, 54 வது படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் சுதேச மருத்து மற்றும் குழந்தைகள் பராமரிப்பு சேவைகள் செயலாளர், மன்னார் மாவட்ட மேலதிக செயலாளர் மற்றும் பிற அரசு அதிகாரிகள் விழாவில் கலந்து கொண்டனர்.
கொவிட் 19 பரவல் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு பதவிநிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மாவட்டத்தைச் சுற்றிலும் பாதிக்கப்பட்டவர்களின் திடீர் அதிகரிப்புக்கு ஏற்ப கட்டில் மற்றும் இடைநிலை பராமரிப்பு நிலையங்களை சில நாட்களுக்குள் மாற்றுவதற்கு 54 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷனா விஜேசேகரவிடம் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.