16th August 2021 21:15:03 Hours
54 வது படைப்பிரிவின் புதிய தளபதி மேஜர் ஜெனரல் யூடி விஜேசேகர மற்றும் 65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி மற்றும் 653 பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜீஎஸ் பொன்சேகா ஆகியோர் மன்னர் மறை மாவட்ட ஆயர் பேராசிரியர் கலாநிதி லயனல் இமானுவேல் பெர்னாண்டோவை சந்தித்தித்து கலந்துரையாடினர். 10 ஆகஸ்ட் 2021 அன்று மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திபின்போது தளபதிகள் ஆசியும் பெற்றுக்கொண்டனர்.
மேற்படி மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது, நால்வரும் கொவிட் – 19 பரவல் மற்றும் கட்டுப்பாட்டு நிலைமைகள் மற்றும் பொதுவான சில விடயங்கள் தொடர்பிலும் கருத்து பரிமாறிக்கொண்டனர்.