Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th September 2022 18:21:55 Hours

மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டப் பாடநெறி இல .31 இன் நிறைவு நிகழ்வு

குகுலேகங்கவில் உள்ள இலங்கை சர்வதேச சமாதான ஒத்துழைப்பு நடவடிக்கை பயிற்சி (IPSOTSL) நிறுவனத்தில் ஓகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 01 வரை, பாடநெறி எண். 31 மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் (HR & IHL) அடிப்படை பாடநெறி நடாத்தப்பட்டது. இந்த பாடநெறியானது இராணுவ தலைமையகத்தில் உள்ள மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டப் பணிப்பகத்தின் மேற்பார்வையின் கீழ் நடாத்தப்பட்டது.

3 கடற்படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மற்றும் 2 விமானப்படை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட 20 அதிகாரிகள் மற்றும் 46 சிப்பாய்கள் பாடநெறியில் கலந்து கொண்டனர்.

பாடநெறியின் சிறந்த அதிகாரிக்கான விருது இலங்கை பொறியியலாளர்கள் படையணியின் லெப்டினன் கேணல் P.S.J பெர்னாண்டோவுக்கும், பாடநெறியின் சிறந்த சிப்பாய்க்கான விருது சிறப்புப் படையணியைச் சேர்ந்த சார்ஜென்ட் H.M.S.K செனவிரத்னவுக்கும் வழங்கப்பட்டது.

இராணுவத் தலைமையகத்தில் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ரசிக குமார பிரதம அதிதியாக பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டார். பயிற்றுநர் அதிகாரிகள் உட்பட மூத்த அதிகாரிகள் பாடத்தின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர்.