Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th February 2024 17:00:38 Hours

மனநலம் மற்றும் குடும்ப நல்வாழ்வை மேம்படுத்துதல் பற்றிய செயலமர்வு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பீ.ஏ.டி.டபிள்யூ. நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலில் இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நெலுகா நாணயக்கார அவர்களின் மேற்பார்வையில் 2024 பெப்ரவரி 17 அன்று இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் 'மனநலம் மற்றும் குடும்ப நல்வாழ்வை வளர்ப்பது' என்ற தலைப்பில் செயலமர்வு நடைபெற்றது.

மன ஆரோக்கியத்தை வளர்ப்பது மற்றும் குடும்ப உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை கருவாக் கொண்ட இச்செயலமர்வை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பணிநிலை அதிகாரி 2 (உளவியல் செயல்பாடுகள்) மேஜர் ஜி ஹேவநாயக்க அவர்களினால் நடாத்தப்பட்டது. இச்செயலமர்வில் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைகள் என 250 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டதுடன், இச்செயலமர்வு மன ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும் ஒற்றுமையான குடும்ப உறவை மேம்படுத்துவதற்கும் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியது.