Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd October 2021 14:35:19 Hours

மத்திய பாதுகாப்பு படை தளபதி படையினருக்கு உரை

மத்திய பாதுகாப்பு படை தலைமையக புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சமந்த சில்வா புதன்கிழமை (13) பதவியேற்ற பின்னர் படைப்பிரிவினருக்கு உரையாற்றினார்.

அவரின் உரையின் போது, நமது தொழில்முறை சேவைகள் அனைத்தும் இலங்கையர்களால் போற்றப்படுவதால் தேசத்தின் மற்றும் நிறுவனத்தின் நலன்களுக்காக ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் கடமைகளைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் விரிவாகக் எடுத்துரைத்தார்.

இந் நிகழ்வில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக சிரேஸ்ட அதிகாரிகள், அதன் கட்டளை முகாம்களின் சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து சிறப்பித்தனர்.