17th August 2023 20:19:52 Hours
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஏற்பாட்டில் 'ஆபத்தான போதை மருந்துகள் மற்றும் போதைப் பொருட்கள்' தொடர்பான விசேட பயிற்சித் திட்டம் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக படையினரை அறிவூட்டும் முகமாக புதன்கிழமை (16) நடாத்தப்பட்டது.
மத்திய பாதுகாப்பு படை தலைமைக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூ எச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்மேற்குறிப்பிட்ட விழிப்புணர்வு விரிவுரையை மருந்துக் கட்டுப்பாட்டு அதிகார சபையின் தேசிய மருந்துக் கல்வி மற்றும் தகவல் அதிகாரி திருமதி மகேஷி மதுவந்தி நிகழ்த்தினார்.