26th May 2024 18:10:50 Hours
மத்திய பாதுகாப்பு படை தலைமையகம், பௌத்த நாட்காட்டியின் சிறப்பு தினமான வெசாக் தினத்தினை ஒட்டி மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி அவர்களின் கருத்தியலுக்கமைய அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் வண்ணமயமான வெசாக் வலயத்தை ஏற்பாடு செய்தது.
மாலையில் மத்திய பாதுகாப்பு படை தலைமையக வளாகத்தில் கொண்டைக்கடலை தானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தான நிகழ்வினை தவிர கண்களைக் கவரும் வெசாக் வலயமும், வெசாக் அலங்காரங்களும், மத்திய பாதுகாப்பு படை தலைமையகம், மத்திய முன்னரங்க பராமரிப்பு பகுதி, தியத்தலாவை இராணுவ அடிப்படை வைத்தியசாலை, 7 வது இலங்கை சமிக்ஞை படையணி, 1 வது கெமுணு ஹேவா படையணி, 7 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி மற்றும் 17 வது இலங்கை பொறியியல் சேவை படையணி ஆகியவற்றில் வெசாக் தின நிகழ்வுகள் நடைப்பெற்றன.