13th August 2021 14:00:33 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் 12 வது படைப்பிரிவு தலைமையகம், 121 மற்றும் 122 பிரிகேடுகள் மற்றும் 23 வது கஜபா படையணி, 3 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி, 20 வது இலங்கை சிங்க படை மற்றும் 18 வது கெமுனு ஹேவா படை ஆகியவற்றிற்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயங்களை ஓகஸ்ட் 9 -11 வரையான தினங்களின் மேற்கொண்டிருந்தார்.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வருகையின் போது அவருக்கு 12 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக மற்றும் பிரிகேட் தளபதிகள் வரவேற்றதுடன் ஒவ்வொரு படை அமைப்புக்களினது தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் அவர்களது கட்டுப்பாட்டு அலகுகள் தொடர்பாக விளக்கமளித்தனர்.
இதன்போது தளபதி புனித கிரிவெஹெர மற்றும் கதிர்காம ஆலயம் சென்று வழிபாடுகளில் ஈடுப்பட்டார். 121 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் உதய சேரசிங்க, 122 வது தளபதி பிரிகேடியர் தி ஜானக பல்லேகும்புர, மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை கடைப்பிடித்து நிகழ்வில் பங்குபற்றினர்.