Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th April 2020 09:15:35 Hours

மத்திய பாதுகாப்பு படையினரால் காய்கறி விதைகள் வழங்கள்

மஹாவலி,விவசாய,நீர்ப்பாசன மற்றும் கிரமிய அபிவிருத்தி அமைச்சினால், இராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட காய்கறி விதைகளானது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள பாதுகாப்பு படைப் பிரிவுகளுக்கு வினியோகிக்கப்பட்டன.

குறித்த காய்கறி விதைகளானது மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்களினால் வைபவரீதியாக மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள படை தலைமையகங்களின் பிரதிநிதிகளிடம் வியாழக்கிழமை ஏப்ரல் 30 ஆம் திகதி வினியோகிக்கப்பட்டன.

இந்த விதைகளானது அதிமேதகு ஜனாதிபதியவர்களின் கொள்கையின் பிரகாரம்,செழிப்பு மற்றும் சிறப்பு ( சௌபாக்ய தெக்ம) எனும் ணிப்பெருளின் கீழ் உணவு உற்பத்தியில் சுய தன்னிறைவு ஏற்படுத்துவதற்கும் வீட்டுத் தோட்டத்தினை ஊக்குவிப்பதற்கும் வழங்கப்பட்டன.

கட்டளை அதிகாரிகள்,சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சில ஏனைய படையினர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். bridge media | adidas Campus 80s South Park Towelie - GZ9177