Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd September 2024 17:30:20 Hours

மத்திய பாதுகாப்பு படையினரால் காட்டுத் தீ அணைப்பு

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.எம்.என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்களின் தலைமையில் தியத்தலாவை பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் 21 செப்டம்பர் 2024 அன்று பரவிய காட்டுத் தீயை விரைவாக அணைத்தனர்.

மத்திய பாதுகாப்புப் படை மற்றும் 23 வது விஜயபாகு காலாட் படையணியின் 3 அதிகாரிகள் மற்றும் 62 சிப்பாய்கள் தியத்தலாவை, கலியாதண்ட பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

படையினரின் இந்த முயற்சியினால் சுமார் 10 ஏக்கர் காடு, பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.