09th November 2023 20:51:12 Hours
கதுருகமுவ மிஹிந்து வித்தியாலய கணினி மற்றும் நகல் எடுக்கும் இயந்திரத்தை பழுதுபார்ப்பதற்காக மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் ஒருங்கிணைப்பில் என்கர் பொன்டெரா தனியார் நிறுவனத்தினால் புதன்கிழமை (நவம்பர் 8) அன்று ரூ. 40,000/= நன்கொடையாக வழங்கப்பட்டது.
இப் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, மேஜர் ஜெனரல் டபிள்யூ டபிள்யூ எச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுக்கு இந்த இரண்டு உபகரணங்களையும் திருத்த வேண்டியதன் அவசியம் குறித்து அறிவிக்கப்பட்டதையடுத்து, அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
புதன்கிழமை (நவம்பர் 8), மிஹிந்து வித்தியாலய அதிபர் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியின் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, கணினி மற்றும் நகல் எடுக்கும் இயந்திரத்தை திருத்துவதற்கான நிதி நன்கொடையை கையளித்தார்.