08th November 2024 14:53:20 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் தியத்தலாவ இராணுவ தள வைத்தியசாலை, 7 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி மற்றும் 8 வது இலங்கை இராணுவ சேவைப் படையணி ஆகியவற்றிற்கு 06 நவம்பர் 2024 அன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், தியத்தலாவ இராணுவத் தள வைத்தியசாலை கட்டளை அதிகாரியினால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். வருகை தந்த சிரேஷ்ட அதிகாரி, மரக்கன்று நாட்டியதுடன், குழு படம் எடுத்துக் கொண்டார். பின்னர் மருத்துவமனை வளாகத்தைச் பார்வையிட்டதுடன், மருத்துவமனையின் செயல்பாடுகள் சீராக நடைபெறுவதற்கு வழிகாட்டுதல்களை வழங்கினார்.
வைத்தியசாலை விஜயத்தை தொடர்ந்து, அவர் 7 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி மற்றும் 8 வது இலங்கை இராணுவ சேவைப் படையணி ஆகியவற்றிற்கு விஜயம் மேற்கொண்டார். அவரது வருகையில் மரம் நடுதல், குழுப்படம் எடுத்துக் கொள்ளல் மற்றும் படையணிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றி வழங்கப்பட்ட விரிவான விளக்கம் என்பவற்றில் கலந்து கொண்டார். அவர் அனைத்து நிலையினருக்கும் உரையாற்றியதுடன், விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டார்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த விஜயத்தில் கலந்து கொண்டனர்.