Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th December 2024 13:42:15 Hours

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி 12 வது காலாட் படைப்பிரிவுக்கு விஜயம்

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் 10 டிசம்பர் 2024 அன்று 12 வது காலாட் படைப்பிரிவு பிரதேசத்திற்கு தனது அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

பிரதான நுழைவாயிலை வந்தடைந்த சிரேஷ்ட அதிகாரியை 122 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் கேஎச்எம்யூபி கொலங்கஹபிட்டிய யூஎஸ்பீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். பின்னர், 12 வது கஜபா படையலகு படையினர் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியின் வாகன தொடரணிக்கு மரியாதை செலுத்தினர்.

பின்னர், 12 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் கட்டளை பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி உரையாற்றினர். தனது உரையில் சமூக ஊடகங்களைக் கையாள்வதற்கான சரியான வழியை எடுத்துரைத்து, சட்டவிரோத செயல்களைத் தவிர்ப்பது மற்றும் நிதி முகாமைத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். இறுதியாக, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் உயர் மட்ட ஒழுக்கத்தை பேணுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

12 வது காலாட் படைப்பிரிவின் அனைத்து நிலையினரும் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி வளாகத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு அவருக்கு நினைவுச்சின்னம் ஒன்றை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.