20th December 2023 21:50:21 Hours
ஹப்புத்தளை புகையிரத நிலையத்திற்கு அருகில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) ஏற்பட்ட மண் சரிவு காரணமாக தடைப்பட்ட மற்றுமொரு புகையிரத பாதையை மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் பொதுச் சேவைக்கு தமது பங்களிப்பை வழங்கும் விதமாக சீரமைத்தனர்.
இதன் காரணமாக பல மணி நேரம் புகையிரத போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக படையினருக்கு கிடைத்த அறிவிப்பைத் தொடர்ந்து அவர்கள் தடைகளை நீக்கி புகையிரத சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு வழிவகுத்தனர்.
இதற்கிடையில், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் விரைவு நடவடிக்கை மோட்டார் சைக்கிள் குழு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 19) தொடர் மழை காரணமாக வெலிமடை-அவிசாவளை பிரதான வீதியில் 6 வது மைல் கல்லிற்கு அருகில் முறிந்து விழுந்த பலா மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டது.
அதற்கமைவாக, படையினர், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளுடன் இணைந்து தடைப்பட்ட வீதியை சீரமைத்த சில மணித்தியாலங்களுக்குள் வீதியின் போக்குவரத்தை மீள ஆரம்பிப்பதற்கு வழிவகுத்தனர்.