08th November 2021 16:20:40 Hours
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா பதுளை மாவட்டத்திலுள்ள பிரிகேடுகள், கட்டளை அலகுகள் மற்றும் ஏனைய பகுதிகளுக்கு நவம்பர் 1 ,2 ஆம் திகதிகளில் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டார்.
அதன்படி முதல் முறையாக 112 வது படையணியின் தலைமையகத்திற்கு வருகை தந்திருந்த அவர் வௌ்ள பாதிப்புக்கு உள்ளாகியிருந்த நீர்பாசான திணைக்களம், பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம், 2 ம் இலங்கை ரைபிள் படையணி, 3 ம் இலங்கை சிங்கப் படையணி, ஹவா எலியா விடுமுறை பங்களா, கொட்டகலை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், கொட்டகலை 581 வது பிரிகேட் தலைமையகம், விமல சுரேந்திர மின் உற்பத்தி நிலையம் மற்றும் அப்பகுதியில் உள்ள 19 வது கெமுனு ஹேவா படையணி ஆகிய இடங்களை மேற்பார்வை செய்தார்.
இதன்போது, 11 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் கே.ஏ.டபிள்யூ.எஸ். ரத்நாயக்க, 112 பிரிகேட் தளபதி மற்றும் சிரேஸ்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.