Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th November 2021 13:53:24 Hours

மத்திய தளபதி 12 வது படைப்பிரிவுக்கு முதல் விஜயம்

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா, தனது புதிய அலுவலகத்தை பொறுப்பேற்ற பின்னர், 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 - 28 ஆம் திகதிகளில் ஹம்பாந்தோட்டையில் உள்ள 12 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டார்.

12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க அவர்கள் வருகை தந்த மத்திய தளபதிக்கு இராணுவ மரபுகளுக்கு அமைவாக வரவேற்பளிக்கப்பட்டதோடு, சிப்பாய்களால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது. 12 வது படைப்பிரிவுக்கான விஜயத்தின் போது தளபதியவர்களால் தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டதோடு, சிப்பாய்களுக்கான உரையொன்றும் நிகழ்த்தப்பட்டது.

இதன்போது 12 வது படைபிரிவின் வகிபாகம் மற்றும் பணிகள் குறித்த விளக்கக்காட்சியை தளபதி சமர்ப்பித்தார். அதனையடுத்து அனைத்து நிலைகளுக்கமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட தளபதி, படைப்பிரிவிலிருந்து வெளியேறும் முன்பாக விருந்தினர் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார். பின்னர் அனைவருக்கும் எதிர்காலத்தில் அவர்களின் கடமைகள் சிறப்பாக மேற்கொள்வதற்கான வாழ்த்துக்களையும் கூறிக்கொண்டார்.

இதேவேளை, 26 ஒக்டோபர் 2021 அன்று புனித கதிர்காமம் கிரிவெஹெர மற்றும் ஆலய வளாகங்களில் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ள சென்றிருந்ததோடு இதன்போது மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியவர்களோடு, 12 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.