Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd November 2021 13:00:50 Hours

மத்திய தளபதி 112 வது பிரிகேடின் நிவாரணப் பணிகளுக்கு பாராட்டு

பதுளை மற்றும் பண்டாரவளை பகுதிகளில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மிக சமீபத்திய ஈடுபாடுகளுக்காக மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் 112 பிரிகேட் படையினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பதுளையில் உள்ள 112 வது பிரிகேட் தலைமையகத்திற்கு விஜயம் செய்த மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா அவர்கள் தமது உயிருக்கு ஆபத்தான நிலையின் போதிலும் அவர்களின் மனிதாபிமானப் பணிகளைப் பாராட்டி அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்வில் 11 வது படைப்பிரிவின் தளபதி, 112 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுர திஸாநாயக்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.