Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th June 2021 09:33:02 Hours

மட்டக்களப்பு படைகளின் ஏற்பாட்டில் மட்டு. வைத்தியசாலைக்கு தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சீரான செயற்பாட்டிற்கு அவசியமான ஒரு தொகுதி தொழில்நுட்ப உபகரணங்கள் அண்மையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கலாரஞ்சனி கணேசலிங்கம் அவர்களிடம் மட்டக்களப்பு பேராயர் இல்லத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

பிரிகேடியர் விஜித ஹெட்டியாராச்சி தலைமையிலான 231 பிரிகேட் தலைமையகத்தின் ஏற்பாட்டில் அவுஸ்திரேலிய பொறியியலாளர்கள் அறக்கட்டளையின் நிதி உதவியில் வைத்தியசாலையின் செயல்பாடுகளுக்கு அவசியமான கணினிகள், அச்சுப்பொறிகள், ஜெனரேட்டர்கள், ஸ்மார்ட் கைபேசிகள், சலவை இயந்திரம் போன்ற தொழில்நுட்ப சாதனங்கள் நன்கொடையாக பெற்றுக்கொடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பேராயர் வண. ஜோசப் பொன்னையா செஞ்சிலுவை சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் சில உறுப்பினர்கள் மட்டக்களப்பு சிவில் அமைப்புகளின் அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.