Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st August 2021 14:00:36 Hours

மங்கட மகா வித்யாலயா விளையாட்டு மைதான சீரமைப்பு நிறைவு

ஹம்பேகமுவ கொட்டவெஹெர, மங்கட மகா வித்தியாலயத்தின் மாபெரும் வடிகால் அமைப்புடனான விளையாட்டு மைதானம் புனரமைத்தல் தேசத்தை அபிவிருத்திச் செய்யும் பணிகளின் கீழ் அதமேதகு ஜனாதிபதியின் அறிவுறுத்தின் பேரில் பாதுகாப்பு பதவுநுலைப்பிரதானியும்இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் உத்தரவின் படி இலங்கை பொறியியலாளர் படையினரால் முன்னெடுக்கும் திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

இந்தத் திட்டமானது 2021பெப்ரவரி மாதம 09ம் திகதி தொடங்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தின் 4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கள பொறியியல் பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுருத்த செனவிரத்ன அவர்களின் மேற்பார்வையில் 6 வதுகள பொறியியல் படையினரால் இத்திட்டம் முனெடுக்கப்படுகின்றது ஜனாதிபதியின்8 வது கமசமக பிலிசந்தர வேலைத்திட்டத்தின் கீழ் 2021 ஜனவரி மாதம் 30ம் திகதி 06 பாடசாலைகளின் மைதானங்கள் புனரமைக்கும்எ பணிகள் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டன. அவற்றில் 05 ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளன.

தலைமை களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகரவின் வழிகாட்டுதலின் கீழ், பொறியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேசுந்தர அவர்கள் இந்த கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள தனது படைகளை இயக்கி மேற்பார்வையிடுகின்றார்.