Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st September 2021 22:02:31 Hours

மகா சங்கத்தினர் மற்றும் ஜப்பானுக்கான இலங்கை தூதர் பரா ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுக்கு அன்பான வரவேற்பு

பரா ஒலிம்பிக் 2020 இல் இலங்கை வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற கஜபா படையின் அதிகாரவாணையற்ற அதிகாரி 1 தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற இலங்கை இராணுவப் பொலிஸ் படையின் கோர்ப்ரல் துலன் கொடித்துவக்கு ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை (31) ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அழைத்து ஜப்பானுக்கான தலைமை தேரர் வண. கலாநிதி பனகல உபதிஸ்ஸ மற்றும் ஜப்பானுக்கான இலங்கை தூதர் திரு சஞ்சீவ் குணசேகர ஆகியோர் அவர்களை வாழ்த்தினர் .

தூதரக அதிகாரிகள் இருவரையும் அன்புடன் வரவேற்றதன் பிறகு மகா சங்கத்தின் உறுப்பினர்கள் மத ஆசீர்வாதங்களை வழங்குவதற்காக 'செத் பிரீத்' பாராயணம் செய்து வரலாற்று வெற்றியை ஈட்டிய இருவருக்கும் சிறப்பு வாய்ந்த 'அனுஷாசனா' (சொற்பொழிவு) வழங்கினார். அதன்பின், இலங்கைக்கான தூதுவர் ஈட்டி எறிதலில் இலங்கை சாதனையாளர்கள் இருவருக்கும் சிறப்பு நினைவுச்சின்னங்களையும் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.

இருவரும் நாட்டையும் இராணுவத்தையும் பெருமைப்படுத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு, பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இருவரையும் தனித்தனியாக வாழ்த்தினார். டோக்கியோவிற்கு அவர்கள் புறப்படுவதற்கு முன்னதாக, இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை இராணுவ தலைமையக தளபதி அலுவலகத்தில் சந்தித்த போது சார்ஜென்ட் ஹேரத் தாய்நாட்டிற்கு ஒரு பதக்கத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். சார்ஜென்ட் தினேஷ் பிரியந்த பதிலுக்கு ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் உறுதியாக உறுதியளித்தார்.

சார்ஜென்ட் தினேஷ் பிரியந்த ஹேரத் திங்கட்கிழமை (30) அன்று அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதலுடன் தனது உலக சாதனையின் இரண்டு மணி நேரத்திற்குள் இராணுவத் தளபதியால் அதிகாரவாணையற்ற அதிகாரி 1 ஆக நிலை உயர்த்தப்பட்டார். ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இருவரையும் முதலில் வாழ்த்தியவர் ஆவார். இராணுவத்தில் 18 மார்ச் 2004 அன்று இணைந்துக் கொண்ட அதிகாரவாணையற்ற அதிகாரி 1 தினேஷ் பிரியந்த ஹேரத் சாலியாபுர கஜபா படையணி தலைமையகத்தில் அடிப்படை இராணுவப் பயிற்சியை முடித்தார். புலி பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் எதிரியின் துப்பாக்கி பிரயோகத்தில் கிளிநொச்சியில் 16 டிசம்பர் 2008 அன்று காயமடைந்தார். பிறகு அவர் இராணுவ மற்றும் கஜபா படையணி தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பரா தடகள பயிற்சி நிகழ்வுகளில் தீவிரமாக பங்கேற்றார்.

2012 ஆம் ஆண்டில் இராணுவ பரா தடகளப் போட்டியில் ஈட்டி எறிதலில் (52 மீ) தங்கம் வென்றார், 2012 இல் மலேசியா பரா தடகளப் போட்டியில் தங்கம் (52.95 மீ), ரியோ பரா ஒலிம்பிக்ஸ் 2016 இல் வெண்கலம், ஜெர்மனி பரா தடகள (தகுதி) போட்டிகள் 2017 ல் (வெள்ளி) 53.09 மீ) , லண்டனில் நடந்த உலக பரா தடகள போட்டிகள் -2017 ல் வெள்ளி 59.90 மீ, 2018 ல் ஆசிய பரா விளையாட்டுப் போட்டியில் தங்கம் 61.84 மீ புதிய சாதனை மற்றும் 2019 ல் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் என்பன இவர் பெற்ற வெற்றிகள் ஆகும்.

வெண்கலப் பதக்கம் வென்ற, கோப்ரல் துலன் கொடித்துவக்கு இந்தோனேசியாவில் நடைப் பெற்ற 2018 ஆசிய பரா விளையாட்டு, துபாயில் நடந்த உலக பாரா விளையாட்டு 2019 மற்றும் தேசிய பரா விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவர் 2009 டிசம்பர் 5 ம் திகதி இலங்கை இராணுவத்தில் சேர்ந்தார். இவர தெனியாயவை பிறப்பிடமாக கொண்டவர்.

(படங்கள் மூலம்: bizreport.lk)